பிஞ்சுக் குழந்ததைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பாசக்கார அம்மா!

கணவரை பிரிந்ததால் பெற்ற மகளை தாய் ஒருவர் வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த விவசாயி காசி. இவரது மகள் மகராசி (வயது 27).

இவருக்கும் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் சிவமகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.

சென்னையில் வசித்து வந்த கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று காலை குழந்தை சிவமகேஸ்வரி வீட்டில் பிணமாக கிடந்தது. இதைப்பார்த்த பாட்டி சந்திரா அதிர்ச்சியடைந்து மகராசியை தேடினார்.

ஆனால் அவரை எங்கும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து பாளை தாலுகா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் பொலிசார் பிணமாக கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் மகராசியை அப்பகுதியில் பொலிசார் தீவிரமாக தேடிச் சென்றதில் தாய் ஒரு காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

இதைபார்த்த பொலிசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்ற திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கொடுத்த வாக்குமூலத்தில்;

என் கணவருடன் சண்டை போட்டு நாம் பிரிந்து விட்டோம். இதனால் மனமுடைந்த நான் எனது குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அதன்படி இன்று காலை அரளிவிதையை அரைத்து எனது மகள் சிவமகேஸ்வரிக்கு கொடுத்தேன். பின்னர் அங்கிருந்து இப்பகுதிக்கு வந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் பொலிசார் என்னை பிடித்துவிட்டனர் எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.