பிஞ்சு குழந்தையின் உணவில் ரசாயன கலவை! தயாரின் அதிர்ச்சி செயல்

அவுஸ்திரேலியாவில் பெர்த் மாகாணத்தில் பிறந்ததில் இருந்தே மருத்துவ சிகிச்சையில் இருந்துவரும் பிஞ்சு குழந்தையை அதன் தாயார் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் 26 வயதான தாயாரை பேர்த் மாகாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிறந்து 13 மாதங்களேயான அந்த குழந்தைக்கு அரியவகை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மட்டுமின்றி அந்த குழந்தையானது 14 வார குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.

மேலும் ஆயுள் முழுக்க அந்த குழந்தையானது உணவு அருந்துவதற்கும் சுவாசிப்பதற்கும் குழாய் மூலமாகவே செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி, ப்ரூக் ஈவ்லின் லூகாஸ் என்ற 26 வயதான அந்த தாயார் குழந்தையின் உணவுக் குழாய் வழியாக ரசாயன கலவையை கலந்துள்ளார்.

சிறார்களுக்கான மருத்துவமனையில் இருந்து குறித்த குழந்தையை வீட்டுக்கு அனுப்பிய 5 வது நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனிடையே உணவில் ரசாயன கலவை கலந்ததால் உயிருக்கு போராடிய குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு விரைந்துள்ளனர்.

தற்போது ஆபத்து கட்டத்தை குழந்தை கடந்த நிலையில் பெர்த் மாகாண பொலிசார் தாயார் ப்ரூக் ஈவ்லினை கைது செய்துள்ளனர்.