பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! கோஹ்லி ஆவேசம்!

இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆவேசமாக ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம் என விராட் அந்த வீடியோவில் குறிப்பிட்டுளு்ளார்.

ரசிகர் ஒருவர் விராட்கோஹ்லியின் பேட்டிங் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட்கோஹ்லி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து, அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்” என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த கருத்தைக் கூறியவர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம்.

மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் அந்த ரசிகர் ஏன் வாழ வேண்டும்?

நீங்கள் என்னை விரும்பவில்லை என்பதற்காக நான் இப்படி பேசவில்லை. நான் இதைச் சொல்வதால் என்னை சிலருக்கு பிடிக்காமல் போகும். ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இங்கு வசித்துக் கொண்டு மற்ற நாடுகள் அங்குள்ள சிறப்பம்சங்களையும் புகழ்வதை என்னால் சகிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

கோஹ்லி இந்தக் கருத்தை கூறியது சர்ச்சையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.