பிரதமர் அவதாரம் எடுத்த மகிந்தவும் பின்புலமும்: உணர்வுள்ள தமிழர்களுக்கு தலைவலி

இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின் சர்வதேசம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆசியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது என இந்திய ஊடகம் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருந்தமை யாவரும் அறிந்ததே.

அத்துடன் பலராலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்தமை பலரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறமை பலர் அறிந்த உண்மை. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற செயல்கள், சீனாவின் வேரூன்றல் யாவுமே அதற்கு சான்று.

ஆனால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடிக்கு நெருக்கமானார். அரசியல் சார்ந்து மட்டுமில்லாமல் தனிப்பட்ட விடயங்களிலும் இவர்கள் நல்ல நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோடிக்கு அவ்வளவு நெருக்கம் இல்லாத மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார்.

ஆகவே இதற்கு பின்னணியில் சீனாவின் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றும் பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது முழுக்க முழுக்க சீனா செய்த அதிரடி என்கிறார்கள். தன்னுடைய ஆதரவாளரை மீண்டும் அங்கு முக்கிய பொறுப்பில் பதவி ஏற்க வைக்க பல நாட்களாக சீனா திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக சீனாவின் எம்.எஸ்.எஸ் (Ministry of State Security -MSS) எனப்படும் உளவுப்படை பின்பிருந்து இயங்கியதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் எது எப்படி இருப்பினும் சீனா இதற்கு பின்புலமாக செயற்படுமாயின் அது இந்தியாவுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லலை.

மேலும் இது இந்தியாவிலும் பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஏற்கனவே ஆசியாவில் உள்ள இரண்டு முக்கிய நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் பெரிய நட்பு நாடுகள் ஆகிவிட்டன.

இந்தியா ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும் பெரிய அளவில் நெருக்கம் காட்டுவதில்லை.

இவ்விடயங்களை அனைத்தையும் உற்று நோக்கையில் பாரியளவிலான மாற்றங்கள் உருவாகலாம். சீனாவின் கையில் மாற்றங்கள் தங்கியிருக்கலாம் என்று பலர் சுட்டுகின்றனர்.

மேலும் சிலர் இது இந்தியா அரசியலின் வெளிப்பாடு எனவும் கருத்துரைத்து வருகின்றனர்.

ஆனால் எது எப்படி இருப்பினும் உணர்வுள்ள தமிழர்களுக்கு மகிந்தவின் மீண்டுமொரு அரசியல் பிரவேசமானது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

-யாழ்ரதி-