பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் சர்ஃபேஸ் கோ

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் புதிய சர்ஃபேஸ் கோ தொடக்க விலை ரூ.38,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ லேப்டாப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த லேப்டாப் ஆகும்.

இன்டெல் பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.