பிரபல இயக்குனர் சென்ற கார் விபத்துக்குள்ளானது: இயக்குனரின் நிலை?

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் சென்ற கார் திடீரென டிப்பர் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கி வரும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இன்று சென்னை செம்மஞ்சேரி அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் சென்ற கார் மீது டிப்பர் லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் கௌதம் மேனன் சென்ற கார் நொறுங்கியது. இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.