பிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண்களுடன் தகாத உறவாம்: மனைவி புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரது மனைவி பரபரப்பு புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முகமது சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தமது பேஸ்புக் பக்கத்தில் பல பெண்களின் புகைப்படங்களை ஹாசின் ஜஹான் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் உள்ள பெண்களுடன் தமது கணவருக்கு தகாத உறவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவற்றுடன் முகமது சமி பல பெண்களுடன் சேட்டிங் செய்த விவரங்களையும் புகைப்படம் எடுத்து ஹாசன் ஜஹான் பதிவிட்டுள்ளார்.

தமது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை, தாம் பரிசாக வழங்கிய அவரது செல்போன் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது தம்மை அடித்து துன்புறுத்தியதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகள் முகமது சமியின் குடும்பத்தினரால் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்ததாகவும், குடும்பமே சேர்ந்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

விரைவில் இதுபற்றி பொலிசாரிடம் முறைப்பாட்டினை அளிக்கவும் ஜஹான் முடிவு செய்துள்ளார்.

மனைவியின் குற்றச்சாட்டு இதுகுறித்து தற்போது வரை முகமது சமி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.