பிரபல நடிகர் கிரேஸி மோகன் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசிரியருமான கிரேஷி மோகன் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணாமாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார். அதில் அவரது எழுத்துக்கும் நகைச்சுவை வசனத்துக்கும் ஏராளமான நடிகர்கள் , இயக்குநர்கள் ரசிர்கர்களாக இருக்கின்றனர்.

உயிரிழக்கும் போது அவருடைய வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது.