பிரபல நடிகையால் தர்மசங்கடத்துக்கு உள்ளான ஜெய் (படம்)

நீயா 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லட்சுமி ராயால் ஜெய் சங்கடத்திற்குள்ளானார்.

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா’.

39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2′ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர்.

ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. பொதுவாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய் நீயா 2 படத்திற்காக பங்கேற்றிருந்தார்.

அவர் பேசும்போது,

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

முடிவில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெய் மற்றும் ராய் லட்சுமி இணைந்து புகைப்படம் எடுத்தனர்.

அப்போது ராய் லட்சுமி போட்டிருந்து காலணியின் ஹீல்ஸ் மிக உயராக இருந்ததால், நாயகியுடன் சிரமப்பட்டுக் கொண்டு ஜெய் நின்றுள்ளார்.