பிரபல பாடகரின் மகன் கைது: நடந்தது இதுதான்!-

பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்ய நாராயண், கார் ஓட்டிச் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரான அவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது மகன் ஆத்திய நாராயண், தனது மெர்சிடஸ் காரை ஓட்டிச் சென்றபோது ஒரு ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

லோகந்த்வாலா பேக் ரோடு (Lokhandwala Back Road ) பகுதியில் நேரிட்ட விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும், பெண் பயணி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த முறைப்பாட்டில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, ஆதித்யா நாராயணை பொலிசார் கைது செய்துள்ளனர்.