பிரபல வில்லன் நடிகர் மர்மான முறையில் மரணம்! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (57) தனது வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 மற்றும் 90 களில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய்தத் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்தவர் மகேஷ் ஆனந்த்.

தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது, ரஜினிகாந்த் நடித்த வீரா படங்களில் வில்லனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2002ல் தனது மனைவியை விவாகரத்து செய்த மகேஷ் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண் வழக்கம் போல நேற்று வந்து கதவை தட்டினார்.

ஆனால் மகேஷ் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்து போது மகேஷ் உயிரிழந்த நிலையில் இருந்தார்.

அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.