பிரான்சில் பாரிய அசம்பாவிதம்! பலரின் நிலை….???

பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.