பிரியங்கா சோப்ராவிற்கு புது கார் வாங்கிக்கொடுத்த கணவர்: விலை இத்தனை கோடியா?

நிக் ஜோன்ஸ் தனது மனைவி பிரியங்கா சோப்ராவிற்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

36 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகையும் தனது மனைவியுமான பிரியங்கா சோப்ராவிற்கு நிக் ஜோன்ஸ் ஒரு காஸ்ட்லி காரை பரிசாக வழங்கியுள்ளார்.

ரூ. 2.73 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 காரை தான் கிஃப்டாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.