பிறப்புறுப்பில் திருடிய பொருளை மறைத்து வைத்த இளம்பெண்! விசாரணையில் திக் திக்

இளம் பெண் ஒருவர் தனது பிறப்புறுப்பில் விலை மதிப்புடைய வாட்சுகளை மறைத்து வைத்து திருடியுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Miami பகுதியைச் சேர்ந்த Delajurea Brookens (29) இவர் பாலியல் தொழிலாளி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய்கிழமை பெயர் தெரிவிக்கப்படாத நபரை மியாமி கடற்கரையில் சந்தித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை பின்பு இருவரும் ஒன்றாக அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

அப்போது குறித்த நபர் பாத்ரூம் சென்று திரும்பிய போது, தன்னுடைய பையில் இருந்த அதிக விலை மதிப்புடைய ஐந்து ரோலக்ஸ் வாட்சுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்

வாட்ச் காணாமல் போனது குறித்து Delajurea Brookens-யிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு தெரியாது தன்னிடம் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.

இதையடுத்து Delajurea Brookens திடீரென்று அந்த ஹோட்டலை விட்டு ஓடியுள்ளார். அவரின் பர்சில் பார்த்த போதும் வாட்சுகள் இல்லை.

அதன் பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர் பொலிசாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

பொலிசார் Delajurea Brookens-ஐ பிடித்து விசாரித்த போது அவரிடம் ஒரு வாட்ச் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீதம் உள்ள நான்கு வாட்சுகள் பற்றி கேட்ட போது தகாத வார்த்தையில் பொலிசாரிடம் பேசியுள்ளார்.

மிகவும் மோசகாம நடந்து கொண்ட அவர் பொலிசாரின் கார் மற்றும் பொலிசார் சிலரை தாக்கியும் உள்ளார்.

இதைத் தொடர்ந்து Delajurea Brookens-ஐ காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிசார் விசாரித்த போதும் எதுவும் சிக்கவில்லை.

பொலிஸ் சிறையில் இருந்த அவர் சிறுநீரை தான் இருந்த இடத்திலே, அதாவது சிறையின் ஒரு ஓரத்தில் கழித்துள்ளார்.

இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் பொலிசார் அவரை பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்ட போது அந்த நான்கு வாட்சுகளையும் அவர் பிறப்புறுப்பில் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே Delajurea Brookens மீது வழக்குகள் இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருடப்பட்ட வாட்சுகளின் மதிப்பு சுமார் 108,000 டொலர் (தற்போது இலங்கை மதிப்பில் 1,96,49,520.00 கோடி) ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.