புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜேர்மன்!

புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் மற்றும் ஈரானில் சிறுபான்மையினரான யாஸிதி பிரிவினர் ஜேர்மனிற்கு புகலிடம் கோரி வருகை தந்துள்ளனர். இவர்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு 85 சதவீத புகலிடக்கோரிக்கையாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எனினும் இந்த ஆண்டு 60 சதவீதமான மனுக்களே ஏற்றுக்கொள்ளப்படும் என ஜேர்மனிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சுமார், 5,350 புகலிடக்கோரிக்கையாளர்களின் மனுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.