புதிதாக குடியேறுபவர்கள் குறித்து அவுஸ்திரேலியர்கள் கூறும் அதிரடி தகவல்!

புதிய குடிவரவாளர்களினால் அவுஸ்திரேலியாவுக்கு நன்மையென கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

புதிய சிந்தனைகள், புதிய கலாச்சாரம் ஆகியவற்றினை உள்வாங்குவதன் மூலம் முன்னேற்றகரமான விளைவுகளே ஏற்படுகின்றன என்றும் Scanlon Foundation அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1500 பேரில் 82 வீதமானவர்கள் புதிய குடிவரவாளர்களினால் நாட்டுக்கு நன்மைகளே அதிகம் என தமது கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

புதிதாக அவுஸ்திரேலியாவுக்குள் குடிவருவோரால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என கூறியுள்ளனர்.

இந்தக்கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 20 வீதமானவர்கள் தாம் மதத்தாலும் நிறத்தாலும் புறக்கணிக்கப்படுகிறோம் என்றும் 48 வீதமானவர்கள் கன்பராவிலுள்ள அரசியல்வாதிகள் தீர்கமான முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் புதிய குடிவரவாளர்களினால் பெருநகரங்கள் நிரம்பி வழிகிறது என்றும், ஆகவே புதிய குடிவரவாளர்களை பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் குடியமர்த்த வேண்டுமெனவும் அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.