புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விலை தெரியுமா?

ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஆர்15 ப்ரோ மாடலை இந்தியாவில் வெளியிட்டது.

முன்னதாக அந்நிறுவனம் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

அமேசான் வலைத்தளத்தில் இன்று (ஜனவரி 9) முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல் முறையாக வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு வழங்கியிருக்கிறது.

புதிய ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா,

f/1.7 மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுவதோடு, எக்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.