புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்! பரிதாபமாக பலியான நபர்

நொச்சியாகம – ரலபனாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

இரண்டு குழுவினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை அதிகரித்தமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 38 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நபரொருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சியாகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.