புர்கா, நிக்காப் அணிய தடை! மினுவாங்கொடயில் தீர்மானம் நிறைவேற்றம்

மினுவாங்கொட நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தீர்மானம் ஒன்று மினுவாங்கொடை நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியது.

இதன் போதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டாமென, நகர சபையினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.