புலம்பெயர்ந்த உறவுகளால் அவுஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

தமிழின அழிப்பின் நினைவு தினமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள், மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இதேவேளை, தமிழ்நாட்டிலும் பல்வேறு அமைப்புக்களால் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.