புலிகளின் சீருடையுடன் உணவு கேட்ட நபர்கள்? தீவிர தேடுதலில் படைத்தரப்பு

புலிகளின் நடமாட்டம் வவுனியாவில் காணப்படுவதாகக் கூறி பாதுகாப்பு படையினர் பலத்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேக நபர்கள் புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டுவிட்டு அவ்வீட்டின் கிணற்றில் நீராடி சென்றுள்ளனா் என்ற தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனால், நேற்று முதல் (வெள்ளிக்கிழமை) வவுனியா முழுவதிலும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் வவுனியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.