புலிகள் குறித்து ஒஸ்லோவின் பிரதி மேயர் கூறிய விடயம் இதோ!

புலிகள் அமைப்பினரை குறை கூறுவதற்கான தேவையோ அல்லது அதற்கான அருகதையோ தனக்கில்லை என, நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் கூறியுள்ளார்.

புலிகள் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்ற ஒஸ்லோ பிரதி மேயரின் கருத்து கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில் ஒரு உதாரணமாகவே புலிகளை சுட்டிக் காட்டியதாக கூறியுள்ளார்.

அவர்களைக் குறை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.