புலிகேசி-2 இல் நடிக்க மறுத்தது ஏன்?: வடிவேலு விளக்கம்!!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி-2 படம் உருவாக இருந்த நிலையில் நடிகா் வடிவேலு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு மாறாக வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்ட நிலையில் தயாரிப்பாளா் சங்கத்தில் படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நடிகா் வடிவேலுவிடம் விளக்கம் கோரி நடிகா் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது, பதில் கடிதம் ஒன்றினை நடிகர் வடிவேலு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

“2016 டிசம்பா் மாதத்திற்குள் இந்த படத்திற்கான பணிகள் முடிவடைந்து விடும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. எனினும், தாமதமாக தொடங்கிய படப்பிடிப்பில் நான் நடித்து வந்தேன்.

எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக நடிகா் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தால் எனக்கு பொருள் செலவும் மனவேதனையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த படத்தில் நடித்தால் வேறு படங்களுக்கான பணியில் பாதிப்பு ஏற்படும்.

மேலும் நடிகா் சங்கம் என்னை அழைத்து என் தரப்பு வாதங்களை கேட்காமல் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஒருதலை பட்சமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.