பூமியை விட்டு நிலவுக்கு செல்லப்போகும் மனிதர்கள்! நாசாவின் புதிய திட்டம்

நிலவில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது சீனா. ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை நிலவின் இருள் நிறைந்த பகுதியில் ஆராய்ச்சி செய்ய அனுப்பியுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் மீண்டும் நிலவில் தனது ஆய்வை தொடர ஆர்வம் கொண்டுள்ளது.

இதற்காக சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தான் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நிலவிற்கு ரோபோ-வை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.