பெண்களுடன் தகாத உறவு: காவல் நிலையத்தை நாடிய கிரிக்கெட் வீரரின் மனைவி

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொல்கத்தா லால்பஜார் காவல்நிலையத்தில் ஹசீன் ஜஹான் கொடுத்துள்ள புகாரில்,

முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை சித்திரவதை செய்வதாகவும், தாக்குவதாகவும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஷமி, மற்ற பெண்களுடன் செய்துள்ள ஆபாச சேட்டிங்களின் ஸ்க்ரீன் ஷாட்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

விரைவில் ஷமியை விசாரணைக்கு அழைக்க கொல்கத்தா பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

முகமது சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

முகமது ஷமி உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சிணைக் கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, முறையற்ற பாலியல் உறவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.