பெண்ணின் உயிரைப் பறித்த பணிப் பகிஷ்கரிப்பு! கொலை செய்து விட்டனர் எனக் கதறும் குடும்பத்தினர்!

நாடாளவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இரேஷான என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூளையில் ஏற்பட்ட கட்டி ஒன்றினால் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தாதியர்கள் பணி பகிஷ்கிரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அங்கு அவருக்கு மருந்து வழங்காமையினாலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரண்டு நாட்களாக மனைவிக்கு மருந்து வழங்கவில்லை என சட்ட வைத்தியர் தன்னிடம் குறிப்பிட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளர்.

இதுவொரு கொலை என அவரது கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.