பெண் ஆடை அணிந்து தூக்கில் சடலமாக தொங்கிய இளைஞர்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

மாணவர் ஒருவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கியுள்ளார்.

கோவை மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த எபின் ராபர்ட் என்ற இளைஞர் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த எபின் நேற்று இரவு விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சேலை, ஜாக்கெட் அணிந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் எபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

எபின் ராவர்ட் நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.