பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் தீவிபத்து !

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடித் தொகுதியில் நேற்று இரவு திடீரென தீ பரவியதனால் பதற்றம் நிலவியது .

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் பகுதியில் உள்ள பெரியபுலம் பாடசாலையிலேயே நேற்று இரவு 8 மணியளவில் தீ அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவதானிக்கப்பட்ட தீ தொடர்பினில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்புச் சேவையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீ அணைப்பு சேவையின் வாகனம் சம்பவ இடத்திற்கு தீ அணைக்க வந்தபோதும் பாடசாலைக்கு அண்மையில் செல்லும் வகையில் அதன் பாதை அகலம் போதாதமையினால் பிரதான வீதியிலேயே வாகனம் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் நீண்ட கோஸ் மூலம் நீர் விசிறப்பட்டு நீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தீக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாதபோதும் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: யாழருவி நிருபர் பகலவன்