பெற்றோர்களிடம் ஜனாதிபதி விடுத்த விசேட கோரிக்கை!

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவ பிரதானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் போலியான கருத்துக்களை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி கேட்டுக்கொணடுள்ளார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.