பெற்ற தாய்க்கு பிரபல நடிகை செய்த கொடூரம்!

பிரபல நடிகை சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

நடிகை சங்கீதா பிதாமகன், மன்மதன் அம்பு, காளை, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதுபோக தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது தாய் மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் வயதான காலத்தில் என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என சங்கீதா மீது புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளிக்க ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.