பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என, குறிப்பிடப்படுகின்றது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூபாயின் மதிப்பிறக்கமானது பேக்கரி தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கு மத்தியில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடுமெனவும் குறிப்பிட்டார்.