பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

திருகோணமலை நகர சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் வயோதிபர் ஒருவரது சடலம் இன்று (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பார்ன்ஸ் அண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் திருகோணமலை துறைமுகப்பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.