பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து!-

பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை 210 கோடி மாதாந்திர பயனாளிகளில் இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

உண்மையிலேயே பேஸ்புக் பயனாளிகளில் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்ட அதேவேளை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.