பேஸ்புக் லவ் செய்த: திருமணம் முடிந்த 3 மாதத்தில் கிழிந்தது கணவனின் உண்மை முகம்

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்த மகாலட்சுமி, திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்;

திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், ஆபாச படங்களை வைத்துக்கொண்டு கணவன் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.