போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான அமைச்சர்கள்! அம்பலமான தகவல்

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி – குருணாகலை அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டமைக்கான முழுமையான பொறுப்பினை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப்பிற்கு கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அதன் கௌரவம் கிடைக்க வேண்டும். மதுஷை கைது செய்ய வேண்டிய நடவடிக்கை கடந்த ஒன்றரை வருடமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் கலைஞர்களுடன் தனக்கு தொடர்பு இல்லையென்றும் எனினும் மதுஷுடன் பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.