பொலிசாரைத் தாக்கிய குத்துச்சண்டை வீரர்! குவியும் நன்கொடை!

பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்ட குத்துச்சண்டை வீரருக்கு 113,000 யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சில் எரிபொருள் விலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால், ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் கடந்த சனிக்கிழமை 8 வநு வாரமாக மீண்டும் பரிஸில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இரு பொலிசார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குத்துச்சண்டை வீரரான Christophe Dettinger நேற்று (திங்கட்கிழமை) சரணடைந்திருந்தார்.

இந்தநிலையில் சரணடைந்தமையினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள குத்துச்சண்டை வீரருக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன.

தற்போது வரை 113,000 யூரோக்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6,600 பேர் இதுவரையில் நன்கொடை வழங்கியுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.