போகோ எஃப்1 ஸ்மார்ட் போன் வெளியானது!

சியோமியின் போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை நாளை (26) தொடங்குகிறது.

போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருந்தது.

போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ஏற்கனவே ரூ.29,999 விலையில் வெளியிடப்பட்டது.

போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஆர்மர்டு எடிஷன் போகோ எஃப்1 விற்பனை டிசம்பர் 26 அதிகாலை 00.01 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.