போதைப் பொருட்களுடன் பொலிசாரிடம் சிக்கிய பிரபல நடிகை

கேரளாவில் பிரபல சீரியல் நடிகை போதை பொருட்களுடன் பொலிசாரிடம் பிடிபட்டுள்ளார்.

மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அஸ்வதி பாபுவின் கொச்சியில் உள்ள இல்லத்தில், போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலினைத் தொடர்ந்து பொலிசார் அங்கு சென்றனர்.

அப்போது மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவையும், அவர் கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமையும் பிடித்தனர்.

இருவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.