போலி செய்திகளுக்காக வாட்ஸ்அப் எடுத்த அதிரடி நடவடிக்கை!

போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளது.

இதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது.

மேலும் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.