மகத்துடன் ஊர் சுற்றும் யாஷிகா! புகைப்படத்தால் சர்ச்சை

பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட மஹத், யாஷிகா மீண்டும் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் போது தனக்குள் ஏற்பட்ட காதலை மஹத்திடம் யாஷிகா வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அதனால் நிகழ்ச்சியின் பேசுபொருளாக இருவரும் மாறியிருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்பும் இருவரும் அவ்வப்போது ஒன்றாக தென்படுகின்றனர்.

ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாக போனது.

இருப்பினும் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்தவகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்கள் இருவரும் நெருக்கமான பழகி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மஹத் மற்றும் யாஷிகா பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

ஆனால், இந்த புகைப்படம் இயக்குனர்கள் மகேஷ் – வெங்கடேஷ் இணைந்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கபட்டது என்று பின்னர் தெரியவந்தது.