மகனை அமெரிக்காவில் சந்தித்த விஜய்! வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .

அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி கிங் யோகி பாபு , விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் விஜய் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் மகன் சஞ்சய்யை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.