மகனை புகைப்படம் எடுத்ததால் பொலிஸ் நிலையம் சென்ற பிரபல பல நடிகர்!

சைப் அலிகான் மற்றும் கரீனா கபூர் தம்பதியினர் மகன் தைமூர் பாலிவுட்டில் செல்ல குழந்தையாக வலம் வருகிறார்.

மகன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள சைப் அலிகான் படபிடிப்பிற்கு சென்றாலே தைமூர் அழுதுகொண்டே இருப்பானாம்.

அவர் மீண்டும் வீடு திரும்பும் வரை சோகமாக இருப்பானாம். அதனாலே அவர் பெரும்பாலும் மகனை கூடவே அழைத்து செல்வதுண்டு.

ஆனால் பத்திரிக்கைகாரர்கள் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்க முந்தியடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சைப் அலிகான் தனது மகனுடன் விமான நிலையம் சென்ற போது அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதற்கு சைப் அலிகான் தனது மகனை புகைப்படம் எடுக்காதீர். அவனுக்கு கண்ணில் கோளாறு வந்து விடும் என்று கோபம் கொண்டுள்ளார்.

இருப்பினும் விடாமல் புகைப்படம் எடுத்தால் புகைப்பட கலைஞர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் சைப் அலிகான் புகார் அளித்துள்ளார்.