மகளை சீரழித்த தந்தை: மீண்டும் அரங்கேறிய அவலம்

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார்.

இதனால், ஆசிரியை சிறுமியுடம் இது குறித்து வினவியுள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூற ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

பின்னர் பொலிஸார் சிறுமியிடம் இதனை பர்றி விசாரித்து விட்டு, சிறுமியின் வளப்பு தந்தையை கைது செய்தனர்.

ஏற்கனவே பொள்ளாச்சியில் மிக கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேரியுள்ள நிலையில் இது போன்ற மேலும் பல செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.