மக்கள் ஏற்றுக் கொள்ளாத தலைவரா டிரம்ப்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை அமெரிக்க மக்கள் தலைவராக ஏற்கவில்லை என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், மத்தியப் பிரதேச மாநிலம் மாண்டுவில் (Mandu) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சில அமெரிக்கர்களின் மோசமான பயத்தைக் கருவியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

அவர், ஒட்டுமொத்த அமெரிக்க மக்களை பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆடம்பரப் பிரச்சாரங்கள் மூலம் டிரம்ப் வென்றார் என ஹிலாரி கூறினார்.