மடிக்கக்கூடிய ட்ரான் உருவாகிறது; அதிரடி காட்டும் சாம்சங்

சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை ட்ரான்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ட்ரான் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய ட்ரான் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது.