மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல் இதோ!

உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூவாய் நிறுவனம் சாம்சங்-ஐ முந்தும் நோக்கில், முதற்கட்டமாக 20,000 முதல் 30,000 யூனிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.