மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது.

இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு திகதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப், OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து அதிகப்படியான விவரங்கள் வெளியாகாத நிலையில் இதன் விலை 2000 டொலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஸ்மார்ட்போனின் பெயர் வின்னர் எல்.டி.இ. என்றிருப்பதால், இதில் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.