மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியானது.. இதோ படங்கள்

ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் அந்நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இவை பார்க்க ஹூவாய் மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை திறக்கும் போது பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று உள்ளது.

ஸ்மார்ட்போனின் மத்தியில் சாதனத்தை மடிக்கக்கூடிய வகையில் கீல் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் கீழ் ‘Designed by OPPO’ எனும் வாக்கியம் காணப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனினை ஒப்போ வடிவமைத்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதேவேளை பொதுமக்கள் ஆர்வத்திற்கு ஏற்ப இவ்வகை ஸ்மார்ட்போன்களை அதிகளவு உற்பத்தி செய்வது பற்றிய முடிவு எட்டப்படும் என ஒப்போ நிறுவன துணை தலைவர் தெரிவித்தார்.