மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தின் தலையில் காயம் ஒன்று காணப்படுவதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.