மட்டக்களப்பு நோக்கி பயணஞ்செய்த பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்!

பயணித்து கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் திகம்பதன பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பேருந்து குருநாகலிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணஞ்செய்த வேளையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்தில் ஏற்பட்டிருக்கும் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமெனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து நேர்ந்த வேளையில் குறித்த பேருந்தில் சாரதி மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.